மாதிரி தேர்வு - 1. கணிதம்
Quiz
- 3/4, 4/7, 8/9 என்ற பின்னல்களை ஏறுவரிசையில் எழுதும்போது முதல் உப்பு மற்றும் 3-ம் உறுப்புகளின் கூடுதல்
- 59/36
- 37/28
- 61/36
- 92/63
- 1 லிருந்து அடுத்தடுத்த எத்தனை ஒற்றை எண்களின் கூடுதல் 256 ஆக இருக்கும்?
- 12
- 14
- 15
- 16
- எந்த மிகச்சிறிய எண்ணிலிருந்து 3 குறைக்கப்படும் பொழுது, அது 21, 28, 36 மற்றும் 45 ஆல் மீதியின்றி வகுபடும்?
- 420
- 1257
- 1260
- 1263
- இரு எண்களின் கூடுதல் 20 அவற்றின் பெருக்கல் பலன் 96 எனில், அவ்விரு எண்களின் மீ.பெ.வ-வின் மதிப்பு?
- 10
- 8
- 4
- 2
- ஒரு பெட்டியில் ரூ.1 மற்றும் 50 பைசா நாணயங்களின் எண்ணிக்கை 210, இரண்டிற்கும் இடையிலேயான விகிதம் 13:11 எனில், 1 ரூபாய் நாணயங்களின் எண்ணிக்கை
- 65
- 52
- 78
- 91
- ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 286, மாணவ / மாணவியர்களுக்கு இடையேயன விகிதம் 8:5. அந்த பள்ளியில் மேலும் புதிதாக 22 மாணவிகள் சேர்க்கப்பட்டால், தற்போது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையேயான விகிதம்
- 12:7
- 10:7
- 8:7
- 4:3
- ஒரு பணியாளர் ரூ.24,000 ஐ ஊக்கத்தொகையாகப் பெறுகிறார். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 20 % எனில், அவரின் மாத வருமானம்
- 8,000
- 10,000
- 12,000
- 15,000
- ஒரு கிராமத்தின் தற்போதைய மக்கள்தொகை தொகை 75,000. இது ஆண்டுக்கு 12% அதிகரித்ததால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கிராமத்தின் மக்கள் தொகை?
- 93,080
- 94,080
- 95,240
- 96,320
- 20 மனிதர்கள் 6 நாட்களில் 56 மீட்டர் நீளமுள்ள சுரை கட்டி முடிப்பர் எனில், 35 மனிதர்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளமுள்ள சுவரைக் கட்டி முடிப்பார்கள்?
- 49 மீ
- 44 மீ
- 40 மீ
- 52 மீ
- A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் எனில், அவ்விருவரும் சேர்ந்து அதே வேலையை செய்து முடிக்க ஆம் நாட்கள்?
- 8 நாட்கள்
- 10 நாட்கள்
- 12 நாட்கள்
- 15 நாட்கள்
- ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10,800 ஆகிறது எனில், அசலின் மதிப்பு என்ன?
- ரூ.7,000
- ரூ.7,200
- ரூ.7,600
- ரூ.8,000
- ராகுல் 7.6.2006 அன்று ரூ.40,000 கடனைப் பெற்று அதை 19.8.2006 அன்று திரும்ப செலுத்துகிறார். கடன் தொகையின் மீதான வட்டி வீதம் 5% எனில், அவர் திரும்ப செலுத்திய தொகை?
- ரூ.40,800
- ரூ.40,600
- ரூ.40,500
- ரூ.40,400
- மரியா ரூ.80,000 ஐ ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்தார். இதற்கு 5% கூட்டி வட்டி அளிக்கப்பட்டதல், இரண்டாம் ஆண்டு முடிவில் அவர் பெயரில் எவ்வளவு தொகை இருக்கும்?
- ரூ.88,200
- ரூ.87,600
- ரூ.87,200
- ரூ.86,400
- ரூ.8000 க்கு 5% வட்டி வீதத்தில் 1 ஆண்டுக்கான கூட்டு வட்டி தனிவட்டிக்கு இடையேயான வேறுபாடு?
- ரூ.81
- ரூ.41
- ரூ.56.50
- எதுவுமில்லை
- ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டம் 10 செ.மீ மற்றும் அதன் நீளம் 8 செ.மீ எனில், அந்த செவ்வகத்தின் பரப்பளவு?
- 48 செ.மீ2
- 54 செ.மீ2
- 58 செ.மீ2
- 42 செ.மீ2
- ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் ஆரம் 70 செ.மீ, அது 132 மீ தொலைவைக் கடக்க சுற்றிய சுற்றுகளின் எண்ணிக்கை?
- 25
- 30
- 32
- 40
- ஒரு உருளை வடிவத் தூணின் வளைபரப்பு 264 செ.மீ2 மற்றும் அதன் கன அளவு 924 மீ3 எனில், அந்த உருளையின் விட்டத்திற்கும், உயரத்திற்கும் இடையேயான விகிதம்?
- 6:7
- 7:6
- 3:7
- 7:3
- ஒரு உருளை, கூம்பு மற்றும் கோளம் அவற்றின் ஆரங்களும், உயரங்களும் சமமாக உள்ளன எனில், இவற்றின் கன அளவுகளின் விகிதம்?
- 3:1:2
- 1:3:2
- 2:3:1
- 3:2:1
- மீனா மற்றும் கீதா ஆகியோரின் வயதின் விகிதம் 4:5. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயதின் விகிதம் 5:6 என இருக்கும் எனில், 6 வருடத்திற்குப் பிறகு கீதாவின் வயது என்ன?
- 48
- 54
- 60
- 66
- சீரான வேகத்தில், ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது. தொடர் வண்டியின் வேகம் மணிக்கு 6 கி.மீ என அதிகரிக்கப்பட்டால், அந்த தூரத்தை கடக்க 4 மணிநேரம் குறைவாக எடுத்துக்கொண்டிருக்கும். அதன் வேகம் மணிக்கு 6 கி.மீ என குறைக்கப்பட்டால், அந்த தூரத்தைக் கடக்க 6 மணிநேரம் எடுத்துக்கொண்டு இருக்கும் எனில், பயண தூரம்?
- 940 கி.மீ
- 340 கி.மீ
- 660 கி.மீ
- 720 கி.மீ
- 9,6,7,8,5 மற்றும் x-ன் சராசரி 8 எனில், x-ன் மதிப்பு?
- 9
- 13
- 12
- 10
- முதல் 5 பகா எண்களின் சராசரி?
- 5.0
- 5.2
- 5.6
- 6.0
- அனைத்துத் திசைகளிலும் முடிவே இல்லாத எல்லைகளைக் கொண்டது
- கோடு
- கதிர்
- தளம்
- கோட்டுத்துண்டு
- நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்ககப்பட்டவர்?
- ஆர்.ஏ.பிஷர்
- தியோபாண்டஸ்
- யூக்ளிட்
- பால்ல்மோஸ்
- இணையதளம், செய்தித்தாள், பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள்
- முதல்நிலை விவரங்கள்
- இரண்டாம்நிலை விவரங்கள்
- மூன்றாம்நிலை விவரங்கள்
- இவை அனைத்தும்
- (a+b)2 = a2 + 2ab + b2 என்பதை (a+b( (a+b) என காரணிப்படுத்திக் காட்டுதல் முறை
- பகுத்தறி முறை
- தொகுத்தறி முறை
- விளையாட்டு முறை
- கண்டறி முறை
- கணிதத்தில் ஒரு பருப்பொருளை அதன் முதல் வகையிலிருந்து அடுத்தடுத்த வகைகள் வரை இணைக்க ..................... மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
- வரைகலை வரிசை அமைப்பு
- வரைகலை அணி
- வரைகலை சங்கிலி அமைப்பு
- வரைகலை வலை அமைப்பு
- மாதவாரி என்ன பாடம், எத்தனை பிரிவேளை என்று திட்டமிட உதவுவது மற்றும் கற்றல் திட்டங்களுக்கும் அடிப்படை
- வாரத்திட்டம்
- மாதத் திட்டம்
- ஆண்டுத் திட்டம்
- பாடத்திட்டம்
- நாற்கரத்தின் பக்கங்களின் மையப்புள்ளிகளை இணைத்தால் கிடைப்பது .............
- இணைகரம்
- சாய் சதுரம்
- சதுரம்
- சரிவகம்
- (0, -2) என்ற புள்ளி எதன் மீது அமையும்?
- OX
- OX1
- OY
- OY1
No comments:
Post a Comment